Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆர்ட்டிகிள் 370 ரத்து செல்லுமா செல்லாதா..? வழக்கை தூசி தட்டும் உச்சநீதிமன்றம்!!

Sekar September 23, 2022 & 14:14 [IST]
ஆர்ட்டிகிள் 370 ரத்து செல்லுமா செல்லாதா..? வழக்கை தூசி தட்டும் உச்சநீதிமன்றம்!!Representative Image.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தசரா விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு பட்டியலிடுவதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

தசரா விடுமுறை அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9 வரை இருக்கும். இந்த வழக்கு ஒரு வருடமாக நிலுவையில் இருக்கும் நிலையில், வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுக்க மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். 

முன்னதாக, முன்னாள் தலைமை நீதிபதி என்வி ரமணா, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்த சட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜூலை மாதம் பட்டியலிட முயற்சிப்பதாக கூறியிருந்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 370-வது பிரிவை நீக்கிய சட்டத்தின் செல்லுபடியை எதிர்த்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கும் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

பின்னர், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 இன் படி எல்லை நிர்ணயம் செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராகவும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், மத்திய அரசால் பெரும் மாற்றங்களை கொண்டு வருவதால், ஏராளமான மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதிலும், மத்திய அரசு சில மாற்ற முடியாத நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு முன், அனைத்து தொகுதிகளுக்கும் எல்லையை நிர்ணயிக்க, எல்லை நிர்ணய ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளதாக மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்