Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் இன்று முதல் மின்கட்டணம் உயர்கிறது - நேரத்திற்கு ஏற்ப கட்டண விகிதத்தில் மாற்றம்..!!

Saraswathi Updated:
தமிழகத்தில் இன்று முதல் மின்கட்டணம் உயர்கிறது -  நேரத்திற்கு ஏற்ப கட்டண விகிதத்தில் மாற்றம்..!! Representative Image.

தமிழகத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

நாடு முழுவதும் மின்கட்டண வசூலிப்பில் மத்திய பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக நேரத்திற்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.  காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலும் அதிக மின்சாரம் பயன்படுத்தும் நேரமாக கணக்கிடப்பட்டு, அந்த நேரங்களுக்கான மின்சார பயன்பாட்டிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிற 'பீக் அவர்' என்று அழைக்கப்படுகிற உச்சநேரத்தில் ( காலை 6 -10மணிமாலை 6 -10 மணி) மின்கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும்,  'சோலார் ஹவர்' என்று அழைக்கப்படுகிற நேரத்துக்கு, வழக்கமான  கட்டணத்தைவிட 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்து. 

மத்திய அரசின் இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்திலும் தொழிற்சாலைகள் மற்றும வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணமும் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, இந்த புதிய மின்கட்டண உயர்வு தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இந்த மின் கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில்நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில்வீடுகளுக்கான மின்சாரப் பயன்பாட்டிற்கு  எவ்வித கட்டண உயர்வும் இருக்காது என்றும், விவசாயம், குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டும் ஒரு யூனிட்டிற்கு, 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயரும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்