Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? - தமிழ்நாடு மகளிர் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Saraswathi Updated:
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? - தமிழ்நாடு மகளிர் ஆணையம் முக்கிய அறிவிப்புRepresentative Image.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பொது விசாரணை மதுரையில் நடைபெறவுள்ளதாக  தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார். 

சமூக நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மகளிர் உரிமைகள், மகளிர் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் அனைத்து பெண்கள் கூட்டமைப்புடன் கலந்துரையாடினார், 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்துலுக்கு உள்ளாகி வருகிறார்கள். சைபர் கிரைம் குற்றங்களில் பெண்கள் அதிக அளவில் சிக்கி கொண்டுள்ளனர். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான  விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆணையத்தின் மூலம்  எடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பொது விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சார்ந்த பெண்கள் பங்கேற்கலாம். மதுரையை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற பொது விசாரணை நடத்தப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 

பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதால் நேரடியாக புகார் அளிக்கிறார்கள். ஜூலை 1 ஆம் தேதிக்குள் பொது விசாரணைக்கான புகார் மனுக்களை தலைவர், தமிழ்நாடு மகளிர் ஆணையம், கலச மஹால் முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 5 எனும் முகவரிக்கு அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 - 28551155, 044 - 28592750 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  

இவ்வாறு அவர் கூறினார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்