Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நான் தமிழிசைதான்.. தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடி..!

Muthu Kumar July 25, 2022 & 12:15 [IST]
நான் தமிழிசைதான்.. தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடி..!Representative Image.

முரசொலி பத்திரிக்கையில் தமிழிசை சௌந்தர்ராஜன் பற்றி இடம்பெற்ற கட்டுரை குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக முன்னாள் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுனராக பதவியில் உள்ளார். இந்நிலையில், திமுக சார்பில் செயல்பட்டு வரும் முரசொலி பத்திரிக்கையில் சமீபத்தில் வெளியான கட்டுரையில் தமிழிசை குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முரசொலியில் வந்த கட்டூரைக்கு பதிலடியாக ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ் எனது பெயரில் மட்டுமல்ல.. உயிரிலும் இருக்கிறது. தமிழகத்தின் மகளான நான் மூக்கையும், வாலையும் தமிழகத்தில் நீட்ட வேண்டியதில்லை. என் உடல், உயிர் அனைத்தும் தமிழ் மண்ணுக்குதான். ஒரு தமிழச்சியாக எனது கருத்துகளை கூறுவதற்கு எனக்கு முழு சுதந்திரம் உள்ளது.

தமிழிசை என்றும் தமிழிசையாக தான் இருப்பேன். ஹிந்திசையாக மாறமாட்டேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். ஹிந்தி திணிப்பு ஹிந்தி திணிப்பு என்று இல்லாத ஒன்றை மக்கள் மீது கருத்து திணிப்பு செய்ய வேண்டாம். மோடி அரசு என்ன செய்தாலும் அதனுடைய நற்பலன்கள் மக்களுக்கு வந்து சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், அப்படி நற்பலன்கள் மக்களை சென்று சேர்ந்தாலும் அது மோடியின் பெயரால் வந்து விட கூடாது என்பதற்காக தான் நீங்கள் செய்யும் பல நிகழ்வுகள் காட்டிக் கொண்டு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்