Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இனி இவங்க எல்லாம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை லிங்க் பண்ணனும்…அரசு வெளியிட்ட ஆணை..!

Gowthami Subramani October 13, 2022 & 11:55 [IST]
இனி இவங்க எல்லாம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை லிங்க் பண்ணனும்…அரசு வெளியிட்ட ஆணை..!Representative Image.

மானியம் பெறக்கூடிய அனைத்து மின் நுகர்வோர்களும், ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் படியே எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் உத்தரவின் படி, ஆதார் எண்ணுடன் பான் கார்டு, வங்கிக் கணக்குகள், வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல, அரசிடம் இருந்து மானியம் பெறக்கூடிய அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், நுகர்வோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பது, வாடகை தாரர்களிடம் அதிகம் மின்கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்” எனக் கூறியுள்ளனர். மேலும், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கடைகள் போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க தேவையில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறக்கூடிய வீட்டு நுகர்வோர், குடிசை நுகர்வோர், பொது வழிபாட்டுத் தலங்கள், விசைத்தறி, கைத்தறி நுகர்வோர்கள், விவசாயப் பயன்பாடு போன்றவற்றிற்கான மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்