Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓட்டுநர் நடத்துனர்களுக்கு எச்சரிக்கை....போக்குவரத்து கழகம் அதிரடி..!

madhankumar July 15, 2022 & 11:18 [IST]
ஓட்டுநர் நடத்துனர்களுக்கு எச்சரிக்கை....போக்குவரத்து கழகம் அதிரடி..!Representative Image.

தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் பள்ளி கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது, மாணவ மாணவிகள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் அரசின் வழிகாட்டுநெறிமுறைகளை பின்பற்றவேண்டும் எனவும் தமிழக அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்றுவர தமிழக அரசு சார்பில் இலவச பஸ்பாஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் அரசு பேருந்துகளில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் பாதியிலேயே இறக்கிவிட்டு விடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த சேத்தி குறிப்பில், பள்ளி கல்லூரி மாணவர்களை தரக்குறைவாக பேச கூடாது, அவர்களை உரிய நிறுத்தத்தில் இறக்கிவிட வேண்டும், இதனை மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அத்துடன் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது 2019-2020 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா  பேருந்து  பயண அட்டை வைத்திருந்தால், நடத்துநர்கள் மாணவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்