Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

நம்பர் 1 முதல்வர்.. நம்பர் 1 மாநிலம்.. இது தான் திராவிட மாடல்!!

Editorial Desk Updated:
நம்பர் 1 முதல்வர்.. நம்பர் 1 மாநிலம்.. இது தான் திராவிட மாடல்!!Representative Image.

இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகம் நம்பர் 1 மாநிலமாகவும், தமிழக முதல்வர் நம்பர் 1 முதல்வராகவும் தேர்வாகியுள்ளார்.

பிரபல ஊடகமான இந்தியா டுடே ஆண்டுதோறும் பொருளாதாரம், கல்வி, மருத்துவம், ஆளுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

இந்த பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 5 வது ஆண்டாக இந்த முறையும் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய அளவில் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவம் போன்ற அனைத்து துறைகளிலும், முழுமையான சமூக நீதியை கடைப்பிடித்து அனைவரையும் உள்ளடக்கி செயல்பட்டு வருவது தான், தமிழகம் தொடர்ந்து முதலிடம் பிடிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

தமிழகமும் தமிழக முதல்வரும் முதலிடம் பிடித்துள்ளது திராவிட மாடல் வளர்ச்சிக்கான சான்றாக உள்ளதாக பலரும் இதை பாராட்டி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்