Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Air India : நடு வானில் தொழில்நுட்ப கோளாறு : அவசரமாக தரையிறக்கிய விமானி.

Muthu Kumar May 20, 2022 & 14:40 [IST]
Air India : நடு வானில் தொழில்நுட்ப கோளாறு : அவசரமாக தரையிறக்கிய விமானி.Representative Image.

Air India : மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ320நியோ விமானம் பெங்களூருக்கு இன்று காலையில் புறப்பட்டது. 

தொழில்நுட்ப கோளாறு 

இந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 27 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த விமானத்தின் இன்ஜின் நடுவானில் செயலிழந்தது. 

அவசரமாக தரையிறக்கிய விமானி

இந்த விமானத்தில் இன்ஜின் நடுவானில் செயலிழந்தை அறிந்த விமானிகள் துரிதமுடன் செயல்பட்டு அந்த விமானத்தை மீண்டும் மும்பை விமான நிலையத்தை நோக்கி திருப்பி அவசரமாக தரையிறக்கினர். 

ஏர் இந்தியா

இச்சம்பவம் குறித்து ஏர் இந்தியா, ​​"ஏர் இந்தியா பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது, எங்கள் பணியாளர்கள் இந்த சூழ்நிலைகளை கையாளுவதில் திறமையானவர்கள். எங்கள் பொறியியல் மற்றும் பராமரிப்பு குழுவினர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும், மற்றொரு விமானம் திட்டமிட்டபடி பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்கு புறப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்