Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

​​​​​​​Sri Lanka : அதிபர் இல்லத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

Muthu Kumar July 09, 2022 & 14:40 [IST]
​​​​​​​Sri Lanka : அதிபர் இல்லத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!Representative Image.

Sri Lanka : இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே என்பவர் புதிய பிரதமராகப் பதவி ஏற்றார்.

இந்நிலையில், இலங்கைக்கு சீனா, இந்தியா  உள்ளிட்ட  நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதிஉதவி செய்தன. ஆனாலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி குறையவில்லை. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அதிபர் கோத்தப ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது.

மேலும், இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை முதல் மக்கள் கொழும்புவில் குவிந்துள்ளனர். மேலும், அதிகபர் கோத்தபய ராஜபக்ஷேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தைக் கலைக்கும் விதமாக போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்