Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

UK Trending News : 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..? பாதிப்பு என்ன தெரியுமா..?

Muthu Kumar May 27, 2022 & 11:15 [IST]
UK Trending News : 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..? பாதிப்பு என்ன தெரியுமா..?Representative Image.

UK Trending News : இங்கிலாந்தில் 23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்ட இளம்பெணுக்கு மூளை நரம்புகளை தாக்கும் நோயின் அறிகுறி.

இங்கிலாந்தில் வசிக்கும் 25 வயது இளம்பெண் ஜோ சாண்ட்லர் தனது 2வது வயதில் இருந்தே சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். உலகம் முழுவதும் பல வகை உணவுகள் இருந்தாலும் சாண்ட்விச் மீது பிரியம் கொண்டுள்ளதால் 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்டு வந்துள்ளார்.

ஜோ சாண்ட்லரின் சிறு வயதில் இருந்தே அவரது பெற்றோர் வேறு உணவுகளை கொடுத்தாலும் அதை சாப்பிட மறுத்துள்ளார். இதனால், அவருக்கு உணவு என்றாலே சாண்ட்விச்தான் என்று பழக்கமாகிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு மூளை மற்றும் நரம்புகளை தாக்கக்கூடிய நோயின் அறிகுறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிகுறிகள் பற்றி மருத்துவரிடம் சோதனை செய்துள்ளார். இது குறித்து, மருத்துவர், “இதற்கு மேலும் மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் வாழ்க்கை முழுவதும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என எச்சரித்துள்ளார். இதனால் தற்போது சாண்ட்லர், பெர்ரி பழங்கள், கடலை என கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உணவுகளையும் சாப்பிட தொடங்கியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்