Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டை விட்டு வெளியே வராதீங்க....இந்தியாவிற்கு ஆரஞ்சு அலர்ட்...மக்களே உஷார்...!

madhankumar June 07, 2022 & 12:15 [IST]
வீட்டை விட்டு வெளியே வராதீங்க....இந்தியாவிற்கு ஆரஞ்சு அலர்ட்...மக்களே உஷார்...!Representative Image.

இந்தியாவின் பல மாநிலங்களில் இன்னும் கோடை வெயிலின் தாக்கமானது குறையவில்லை. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வெயில் அடிக்கிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக 44 டிகிரி செல்சியஸ் முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இந்நிலையில் கடும் வெப்பத்தின் காரணமாக டெல்லியில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.கே.ஜனமணி விடுத்த செய்திக்குறிப்பில்  வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன்  அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அருணாச்சலப்பிரதேசம்  மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

வடமாநிலங்களில் இன்னும் பருவமழை தொடங்காமல் உள்ளது. மேலும் இதுகுறித்து ஆய்வுகள் நடத்துவருவதாகவும் பருவமழை குறித்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.  டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்பம் வாட்டி வரும் நிலையில் இன்னும் 4 நாட்களுக்கு தொடரும் எனவும் அதனால் மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்