Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

#Breaking அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு வெளியானது அதிரடி அறிவிப்பு!

KANIMOZHI Updated:
#Breaking அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு வெளியானது அதிரடி அறிவிப்பு!Representative Image.

புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் பல்வேறு முக்கிய திட்டங்கள் மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அமைச்சரவை கூட்டம் புதிய ஆண்டில் 4ம் தேதி கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜனவரி 4ம் தேதி  தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அமைச்சரவையில் புதிதாக கடந்த 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

மேலும் பல அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்து அறிவிப்புகள் வெளியாகின, இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கடந்த முறை சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை என்னவாக உள்ளது, இலாக்காகள் மாற்றம் தொடர்பாகவும், நிலுவையில் உள்ள மசோதாக்கள், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்டப்பேரவை சட்ட தீர்மானங்கள் மற்றும் வரக்கூடிய 2023ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் பொங்கல் விழாவிற்கு முன்னதாக வைக்கலாமா அல்லது  பிறகு வைக்கலாமா அதில் என்னென்ன அறிவிப்புகள் புதிய அறிவிப்புகள் வெளியிடலாம் என்பது குறித்து எல்லாம் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்