Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.50 லட்சம் மோசடி புகாரில் சிக்கினார் பாஜக ஆதரவாளர்.!

madhankumar May 30, 2022 & 12:03 [IST]
ரூ.50 லட்சம் மோசடி புகாரில் சிக்கினார் பாஜக ஆதரவாளர்.!Representative Image.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த கோவிலை மர்ம நபர்கள் புகுந்து இடித்ததாகவும், வேற்று மதத்தினை சேர்ந்தவர்கள் கோவில் கருவறைக்குள் புகுந்து சிலைகளை உடைத்தாய் புகார் எழுந்தது. இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் சிலை உடைப்பில் மற்ற மதத்தினருக்கு தொடர்பில்லை என கண்டுபிடித்தனர். மேலும் சிலை உடைப்பு தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து சேதமடைந்த அந்த கோவிலை புனரமைக்கும் பணியில் கார்த்திக் கோபிநாத் என்பவர் களமிறங்கினார். இளைய பாரதம் என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர், பாஜகவின் தீவிர தொண்டன் ஆவார், மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருங்கிய தொடர்பு உடையவராக தன்னை காட்டிக்கொண்ட இவர், மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகையில் போது விமான நிலையத்திற்கு சென்று வரவேற்ற நபர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.

இந்நிலையில் கோவில் புனரமைப்பில் வசூல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் பணத்தில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோடி கணக்கில் கோவில் புனரமைப்புக்காக பணம் வசூல் செய்துவிட்டு அதில் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 50 லட்சம் மோசடி புகாரில் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்துள்ளனர். 

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவை எதிர்த்து குரல் கொடுத்தினாலேயே அவர் பொய் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளார். மேலும் அவருக்கு தேவையான சட்ட உதவிகள் அனைத்தையும் தமிழக பாஜக வழங்கும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த கோவில் புனரமைப்பு மோசடி தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியானது, அதில் இந்த கார்த்திக் என்பவர் அண்ணாமலை பெயரையும் பயன்படுத்தியிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கார்த்திக் கோபிநாத் யார் என்பதே எனக்கு தெரியாது என அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால் தற்போது அவரின் கைது நடவடிக்கைக்கு பொங்கி எழுந்துள்ள அண்ணாமலை அவருக்கு பாஜக உதவி செய்யும் என கூறியுள்ளது, இந்த மோசடியில் அண்ணாமலைக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தை எழுப்புகிறது என திமுகவினர் கூறிவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்