Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வட இந்திய பல்கலையில் முதல் தமிழ்த்துறை.. ரூ.5 கோடி ஒதுக்கி தமிழக அரசு ஆணை!!

Sekar September 07, 2022 & 19:45 [IST]
வட இந்திய பல்கலையில் முதல் தமிழ்த்துறை.. ரூ.5 கோடி ஒதுக்கி தமிழக அரசு ஆணை!!Representative Image.

முதல் முறையாக வட இந்திய பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் மொழிக்கென்று தனித்துறை தொடங்க தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) இந்திய மொழிகள் மையத்தில் தமிழ், இந்தி, உருது, இந்தி மொழியாக்கம் மற்றும் கன்னட மொழிக்கென்று தனி இருக்கைகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழ் இருக்கைக்கு பல்கலைக்கழகம் மூலமாக பேராசிரியர் ஒருவரும், தமிழ்நாடு அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக உதவிப் பேராசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டு 2007 முதல் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ் மொழிக்கான இருக்கை தற்போது தனித்துறையாக செயல்பட உள்ளது. இந்த தமிழ் இலக்கியவியல் துறை மூலமாக ஒப்பாய்வு, முதுகலை தமிழ் இலக்கியப் படிப்பு, வல்லுநர்வழி மொழியாக்கம், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது வட இந்தியாவில் உள்ள பல்கலைக் கல்லூரியில் தொடங்கப்படும் முதல் தமிழ்த்துறையான இதன் மூலம், உலக அளவில் கவனம் பெறும் துறையாக தமிழ் இலக்கியவியல் துறை மாறும் என தமிழ் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்