Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தட்டித்தூக்கிய தமிழ்நாடு; மத்திய அரசிடம் மாஸ் காட்டிய மா.சு-வின் துறை! 

KANIMOZHI Updated:
தட்டித்தூக்கிய தமிழ்நாடு; மத்திய அரசிடம் மாஸ் காட்டிய மா.சு-வின் துறை! Representative Image.

ஆண்களுக்கு பெண் தன்மையுடைய கீச்சு குரல்(பியூபர்போனியா ) குறைபாட்டுக்கு அரசு சார்பில் தனி சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

காது தொண்டை மூக்கு நிபுணர் குமரேசன் எழுதிய மகரக்கட்டு மருத்துவம் என்கிற நூல் வெளியீட்டு விழாவானது ராயப்பேட்டையில் உள்ள திருக்குறள் அரங்கில் நடைபெற்றது.

காது மூக்கு தொண்டை நிபுணர் குமரேசன் எழுதிய மகரக்கட்டு மருத்துவம் என்கிற நூல் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள திருக்குறள் அரங்கில் நடைபெற்றது. 

இந்த விழாவில் கலந்துகொண்ட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் புத்தகத்தை வெளியிட்டார் அந்த புத்தகத்தின் முதல் பிரதியை பாடநூல் கழக தலைவர் ஐ லியோனி பெற்றுக் கொண்டார்.


இவ்விழாவில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியம்: பெண் தன்மையுடைய கீச்சு குரல் கொண்ட 1,010 பேர் குரல் செய்து உள்ளார் மருத்துவர் குமரேசன்.கீச்சு குரல் உடையவர்கள் மிகவும் மனம் நொந்துபோய் இருப்பார்கள். ஆனால் இந்த மகரகட்டு சிசிக்சை அவர்கள் வாழ்க்கையை மாற்று வருகிறது.


எனவே தமிழகத்தின்  தனியாக இதற்கு என ஒரு துறை அமைத்து அதற்காக மருத்துவர்களுக்கு மருத்துவர் குமரேசன் தலைமையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் 10 மேற்பட்ட ஒன்றிய விருதுகள் வழங்கப்பட்டு உள்ளதும் என்றும் அறிவித்தார். 

எய்ட்ஸ் கட்டுப்பாடு, உணவு பாதுகாப்பு, கர்ப்பிணி சிகிச்சை,  துறைகளில்  இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்திற்கான விருதை பெற்று உள்ளது என்றும் திருநங்கைகளுக்கான குரல் மாற்று  சிகிச்சை செய்யும் பணியையும் அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்