Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இரண்டு நாள்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர்… ஆய்வுக் குழு கூட்டத்தில் முக்கிய தகவல்…

Gowthami Subramani October 17, 2022 & 12:15 [IST]
இரண்டு நாள்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர்… ஆய்வுக் குழு கூட்டத்தில் முக்கிய தகவல்…Representative Image.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி துணைத் தலைவர் பங்கேற்றனர்.

அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இரண்டாகப் பிளந்து, அதிமுக தலைவருக்கான தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது. இதில், அதிமுக கட்சியின் தலைவரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற ஓ.பன்னீர் செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

கூட்டத்தொடர் தொடங்கிய பிறகு, மறைந்த உறுப்பினர்கள், தலைவர்கள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் போன்றோர்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த இரங்கல் தீர்மானம் முடிந்த பின், இன்றைய சட்டசபை கூட்டம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆய்வுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வமும் பங்கேற்றுள்ளார்.

இந்த கூட்டத்தில், சட்ட சபை கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடத்துவது குறித்த பல விவரங்கள் ஆலோசிக்கப்பட்டது. அதன் படி, தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் 2 நாள்கள் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்