Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குஜராத்துக்கு நோ.. ஹிமாச்சலுக்கு மட்டும் தேர்தலை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!!

Sekar October 14, 2022 & 16:24 [IST]
குஜராத்துக்கு நோ.. ஹிமாச்சலுக்கு மட்டும் தேர்தலை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!!Representative Image.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையர் ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

ஹிமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, டிசம்பர் 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

இமாச்சல பிரதேச தேர்தல் 2022: முழு அட்டவணை

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் : அக்டோபர் 25
வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் : அக்டோபர் 29
வாக்களிக்கும் நாள் : நவம்பர் 12
வாக்கு எண்ணிக்கை/முடிவுகள் : டிசம்பர் 8

இமாச்சலப் பிரதேச சட்டசபையில் மொத்தம் 68 இடங்கள் உள்ளன. தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி வசம் 45 இடங்கள் உள்ளன. இரண்டு சுயேட்சைகளின் ஆதரவையும் பெற்றுள்ளது. எதிர்கட்சியில் காங்கிரஸ் 20 இடங்களிலும், சிபிஐக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். 

முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக மோடி அலை'யில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க போட்டியிடும். மறுபுறம், காங்கிரஸ், ஒரு காலத்தில், மறைந்த வீரபத்ர சிங் தலைமையில் மாநிலத்தில் அதிக ஆதிக்கம் செலுத்திய கட்சியாக இருந்த நிலையில், ஆட்சியை கைப்பற்ற போராடும்.

மாநிலம் பாரம்பரியமாக இரண்டு தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டியைக் கண்டாலும், இந்தத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி இரண்டு முக்கிய கட்சிகளின் வாக்கு வங்கியை உடைக்க முயற்சிக்கிறது.

இதற்கிடையே 2017இல் இரு மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்த நிலையில், இந்த முறை ஹிமாச்சல பிரதேசத்திற்கு மட்டும் தேர்தல் அட்டணவனையை வெளியிட்டுள்ளதால் குழப்பம் நிலவுகிறது. 

எனினும், நவம்பர் 12 ஆம் தேதி தேர்தல் நடந்து, சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு டிசம்பர் 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளதால், நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் குஜராத் தேர்தல் நடக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியக்கிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்