Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2 செயற்கை கோளுடன் விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.வி...!

madhankumar August 07, 2022 & 08:41 [IST]
2 செயற்கை கோளுடன் விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.வி...!Representative Image.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பிஎஸ்எல்வி , ஜிஎஸ்எல்வி என்ற ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதில் இந்த ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் 4000 கிலோ எடை வரையிலும், பி.எஸ்.எல்.வி 1800 கிலோ எடை வரையிலும் சுமந்து செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரோ மைக்ரோ நேனோ என்ற 500 கிலோ வரையிலான சிறிய செயற்கை கொலை சுமந்துசெல்லக்கூடிய வகையில் எஸ்.எஸ்.எல்.வி என்ற சிறிய வகை ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட் தான் நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வில்லின் செலுத்தப்பட உள்ளது. நாளை காலை 9.18 மணியளவில் விண்ணில் ஏவப்படும் இந்த ராக்கெட்டில் இ.ஓ.எஸ் - 2 145 கிலோ எடை செயற்கைக்கோள் இடம்பெறுகிறது. இது பூமியை கண்காணிக்க அனுப்பப்படுகிறது. மேலும் இதேபோல் 8 கிலோ எடை உடைய ஆசாதிசாட் என்ற செயற்கை கொள்ளும் அனுப்பப்படுகிறது. இது 75பள்ளிகளை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்டது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமப்புற அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளால், சிறிய மென்பொருட்கள் அனைத்துமே உருவாக்கப்பட்டு 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்பால் இந்த எஸ்.எஸ்.எல்.வி., வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசாதிசாட் எனப்படும் செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்