Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுங்க கட்டணம் உயர்வு...?வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

madhankumar [IST]
சுங்க கட்டணம் உயர்வு...?வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!Representative Image.

சென்னையில் ஐடி கலாசாரம் அதிகரித்த போது பழைய மகாபலிபுரம் சாலை, 2008-ம் ஆண்டு ‘ஐடி எக்ஸ்பிரஸ் வே’ வாக மாறியது. மத்திய கைலாஷில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி வரை 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய 4 வழிப் பாதை அமைக்கப்பட்டது.

மிகவும் தரமான சாலைகளும் மேடு பள்ளங்கள் இல்லாத அளவு மின்விளக்குகள் அமைக்கப்பட்ட ஓ.எம்.ஆர். சாலையில், பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை ஆகிய பகுதிகளில் 5 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்க சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி நாவலூர் சுங்கச் சாவடியில் ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.11-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் கார்களுக்கான கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.33-ஆகவும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.49-ல் இருந்து ரூ.54 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துக்கான கட்டணம் ரூ.78-ல் இருந்து ரூ.86-ஆகவும், சரக்கு வாகனங்களுக்கு ரூ.117-ல் இருந்து ரூ.129-ஆகவும், பல அச்சு வாகனத்திற்கு ரூ.234-ல் இருந்து ரூ.258-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் வரும் ஜூலை 1 முதல் அதிகரிக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, கார், ஜீப் ஆகியவை மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.345 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் சரக்கு வாகனங்கள் மாதம் முழுவது பயணிக்க பயண அட்டை ரூ.3,365 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்