Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

சுற்றுலா பயணிகளுக்கு நற்செய்தி...திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி!

madhankumar May 25, 2022 & 15:18 [IST]
சுற்றுலா பயணிகளுக்கு நற்செய்தி...திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி!Representative Image.

இன்றுமுதல் சுற்றுலா பயணிகளுக்கு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி வழங்கி கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதியான பேச்சிப்பாறை பெருஞ்சாணி கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. பேச்சிப்பாறை, அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை  எட்டும் அளவிற்கு வந்தது.இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால்  கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து திற்பரப்பு அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 3 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டத்தில் நேற்றும் இன்றும் மழையின் அளவு குறைந்து காணப்படுவதாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதாலும், சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அணையில் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்