Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தூத்துக்குடி துப்பாக்கி சூடு 4ஆம் ஆண்டு நினைவு நாள்...பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிப்பு..!

madhankumar May 22, 2022 & 11:33 [IST]
தூத்துக்குடி துப்பாக்கி சூடு 4ஆம் ஆண்டு நினைவு நாள்...பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிப்பு..!Representative Image.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தூப்பாக்கிச்சூடு நடந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைகிறது. இதுதொடர்பான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, சி.பி.ஐ விசாரணை அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆனது அந்த ஆலையை சுற்றியுள்ள 10ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018-ல் மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

அப்போது நடந்த மிகப்பெரிய கலவரத்தின் போது பொலிஸாரால் நடத்தப்பட்ட தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் சிக்கி 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இதையடுத்து இந்த வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அமைக்க பட்ட தனி நபர் விசாரணை ஆணையம் மே 18 ஆம் தேதி இது தொடர்பாக முழு அறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. இந்நிலையில், இந்நிகழ்வின் 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனால் பாதுகாப்பு கருதி சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டுமன்றி, மாவட்டம் முழுக்க சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து வெளிமாவட்டத்தினர் வருகை குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 

முன்னதாக நேற்று தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை இந்த படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் யாரென இதுவரை கண்டுபிடிக்கவில்லை என ஸ்டெர்லைட் போராட்ட குழுவை சேர்ந்த பாத்திமா பாபு கூறியிருந்தார். தற்போது முதல்வரிடம் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கை 3000 பக்கங்களை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்