Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டைப்ரைட்டிங் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..

Nandhinipriya Ganeshan September 22, 2022 & 10:30 [IST]
டைப்ரைட்டிங் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..Representative Image.

தமிழ்நாட்டில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் மூலம் டைப்ரிட்டிங் மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும். 

இந்த தேர்வு நடைமுறையில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சமீபத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி, இரண்டாவது தாள் முதலாவதாகவும், முதல் தாள் இரண்டாவதாகவும் மாற்றப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தனி நீதிபதி, டைப்ரைட்டிங் தேர்வை பழைய முறைப்படியே நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து, திருச்சி துறையூரை சேர்ந்த பிரவீன் குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்திருந்தார். அதில் புதிய முறைப்படி தேர்வு நடத்தினால் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிகள், பழைய நடைமுறைப்படியே தேர்வு நடத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தனர். 

மேலும் இந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த டைப்ரைட்டிங் தேர்வு நடத்தக் கூடாது, நீதிமன்றம் அனுமதித்த பிறகே தேர்வு நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்