Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சொன்னா கேளுங்க.. வேண்டாம்.. உதயநிதி அன்பு கட்டளை.. உடன்பிறப்புகள் கடைபிடிப்பார்களா?

Sekar [IST]
சொன்னா கேளுங்க.. வேண்டாம்.. உதயநிதி அன்பு கட்டளை.. உடன்பிறப்புகள் கடைபிடிப்பார்களா?Representative Image.

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், சுயலாபத்திற்காக திமுகவை விமர்சிக்கும் நபர்களுக்கு பதிலடி கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். 

சினிமா தயாரிப்பாளராக இருந்து, பின்னர் நடிகராகவும் ஆனதோடு, திமுகவிலும், இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக உதயநிதி ஸ்டாலின் பல பரிமாணங்களில் ஒரே நேரத்தில் செயல்பட்டு வருகிறார்.

சமீப காலமாக கோலிவுட்டை ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் முழுமையாக கட்டுப்படுத்துவதாகவும், ரெட் ஜெயன்ட்ஸ் கண்ணசைவு இல்லாமல் எந்த படங்களும் வெளியாவதில்லை என பலரும் முணுமுணுத்து வருகின்றனர்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சென்னையில் ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலினோடு கலந்துகொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி மோதலில் திணறி வரும் நிலையில், அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக அனைத்து விஷயங்களிலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், திமுகவைச் சேர்ந்தவர்கள் தினமும் தமிழக பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து பேசி அவருக்கு விளம்பரம் தேடித் தருவதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் சென்றுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக முதல்வர் ஸ்டாலின் அரைகுறை அரசியல்வாதிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் எனக் கூறி மறைமுகமாக பாஜக மீதான விமர்சனத்தை குறைக்கும்படி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "சுய லாபத்திற்காக நம்மை விமர்சிக்கும் அரசியல்வாதிகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களை கண்டுக்கொள்ள வேண்டாம். நாம் நம் வேலையை மட்டும் பார்ப்போம்." என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் கருத்தை அவரது மகனும் திமுகவின் அடுத்த வாரிசாக கருதப்படுபவருமான உதயநிதி ஸ்டாலின் வழிமொழிந்துள்ள நிலையில், இதை உடன்பிறப்புகள் கடைபிடிப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்