Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நான் நலமாக இருப்பதாக ராமதாஸ் அறிவித்த தகவல்...!

Muthu Kumar July 14, 2022 & 17:40 [IST]
நான் நலமாக இருப்பதாக ராமதாஸ் அறிவித்த தகவல்...!Representative Image.

Dr. Ramadoss Health condition : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில், நான் நலமாக இருக்கிறேன் என டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டது என்னவெனில், கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர்  அன்பின் மிகுதியால் என்னிடம் நலம் விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் பேச முடியாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது.  அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன். எனவே, பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட  அனைவரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்