Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரிட்டன் பிரதமராக பங்கேற்கும் ரிஷி சுனக்... களத்தில் கால் வைத்த உடனே சந்திக்கும் சவால்...

Gowthami Subramani October 25, 2022 & 10:20 [IST]
பிரிட்டன் பிரதமராக பங்கேற்கும் ரிஷி சுனக்... களத்தில் கால் வைத்த உடனே சந்திக்கும் சவால்...Representative Image.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து பிரதமர் பதவியைத் துறந்து, தற்போது புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றுள்ளார்.

கொரோனா, உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால், ஒவ்வொரு நாட்டிலும் விலைவாசி உயர்வு, வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க முடியாமல், பிரதமர் பதவியைத் துறந்து வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கான்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று, அந்த கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். பிறகு, 3 ஆண்டுகால ஆட்சியை வழிநடத்திய பிறகு, ஊழல் மற்றும் பொருளாதாரத்தை சரியாக கையாளவில்லை என போரிஸ் ஜான்சன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இவர் பிரதமர் பதவியை விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு, பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு, இவரும் அதே காரணத்திற்காக பதவி விலகியுள்ளார்.

புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்பதாக கூறப்பட்டது. ஆனால், ரிஷி சுனக் போட்டியின்றி தற்போது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக விளங்கிய ரிஷி சுனக், பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளிப்பர் என்று பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமாக இன்று பதவியேற்கிறார். இவருக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்