Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ukraine People Return Home: மீண்டும் சொந்த நாடு திரும்பும் உக்ரைன் மக்கள்.!

madhankumar May 19, 2022 & 11:16 [IST]
Ukraine People Return Home: மீண்டும் சொந்த நாடு திரும்பும் உக்ரைன் மக்கள்.!Representative Image.

போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர். மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு திரும்புவதை எல்லை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் தாக்குதலை தொடங்கியதில் இருந்து 1,280 க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த பிராந்தியத்தின் காவல்துறை  தலைவர் ஆண்ட்ரி நெபிடோவ் கூறியுள்ளார். உயிரிந்தவர்களில் பெரும்பாலோர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லிபோவ்கா மற்றும் கொரோலோவ்கா கிராமங்களுக்கு அருகிலுள்ள நேற்று நடைபெற்ற வெடி குண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

இந்நிலையில் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், தற்போது நடந்துள்ள போரின் காரணமாக பத்து மில்லியன் மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் ஊட்டச்சத்தின்மை, பசி மற்றும் பஞ்சம் ஆகியவை பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர ஆர்வம் காட்டிவருகிறது. இதற்கு அமெரிக்கா முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம்மீண்டும் ஒரு போர் நடக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்