Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சட்டப்பேரவையில் போதைப் பொருள்... சிக்கினார் எம்எல்ஏ... இன்னும் என்னென்ன பாக்கணுமோ!

UDHAYA KUMAR September 25, 2022 & 10:24 [IST]
சட்டப்பேரவையில் போதைப் பொருள்... சிக்கினார் எம்எல்ஏ... இன்னும் என்னென்ன பாக்கணுமோ!Representative Image.

உத்திரபிரதேச சட்டப்பேரவைக்குள் பாஜக எம் எல் ஏ ஒருவர் புகையிலை பயன்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

உத்திரபிரதேச மாநிலம் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுக்கவுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். விவாதங்களும், திட்ட அறிவிப்புகளும் வழக்கம் போல நடைபெற்று வந்தது. இந்நிலையில்தான், ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் எம்எல்ஏ ஒருவர் புகையிலை  பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபோல முன்னதாக, பாஜக எம்எல்ஏ ராகேஷ்குமா் கோஸ்வாமி என்பவர் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடியது சர்ச்சையானது. 

இதற்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.  அவையின் மாண்பை குலைக்கும் வகையில் பாஜக எம்எல்ஏக்கள் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்