Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வகுப்பறையில் தூங்கிய மாணவன்.. அலட்சிய ஆசிரியர்கள்.. அதிரடி நடவடிக்கை!!

Sekar July 30, 2022 & 16:56 [IST]
வகுப்பறையில் தூங்கிய மாணவன்.. அலட்சிய ஆசிரியர்கள்.. அதிரடி நடவடிக்கை!!Representative Image.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள், தூங்கிக் கொண்டிருந்த 2 ஆம் வகுப்பு மாணவரை வகுப்பறையில் பூட்டி விட்டுச் சென்றதற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த புதன்கிழமை ஹத்ராஸ் மாவட்டத்தின் நாக்லா பகுதியில் உள்ள பள்ளியின் வகுப்பறையில் ஆறு வயது சிறுவன் பிரேம் பிரகாஷ் தூங்கிவிட்டான்.

ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள், சிறுவன் வகுப்பறையில் தூங்கியதை கவனிக்காமல், பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். மாலை 5 மணியளவில் சிறுவன் எழுந்ததும் அழ ஆரம்பித்தான். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பள்ளியை சுற்றி பார்த்தபோது, ​​வகுப்பறையில் வைத்து சிறுவன் பூட்டப்பட்டது தெரியவந்தது.

அதற்குள் சிறுவனின் தந்தையும் சம்பவ இடத்திற்கு வர, அனைவரும் சேர்ந்து கதவை உடைத்து சிறுவனை மீட்டுள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், அடிப்படை சிக்ஷா அதிகாரி சந்தீப் சிங், சஸ்னியின் தொகுதி கல்வி அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங்கிடம் இந்த விஷயத்தை விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டார். 

“முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, பள்ளியின் தலைமை ஆசிரியர், ஷிக்ஷா மித்ராஸ் மற்றும் பயிற்றுவிப்பாளர் உட்பட 10 பேர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.” என்று சந்தீப் சிங் கூறினார். மேலும் பள்ளியின் ஒரு ஆசிரியர் மற்றும் மூன்று ஷிக்ஷா மித்ராக்களின் ஒரு மாத சம்பளத்தை நிறுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்