Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

ஈரானுடன் வர்த்தகம்.. இந்திய நிறுவனத்திற்கு பொருளாதாரத் தடை. அமெரிக்கா உத்தரவு!!

Sekar September 30, 2022 & 12:14 [IST]
ஈரானுடன் வர்த்தகம்.. இந்திய நிறுவனத்திற்கு பொருளாதாரத் தடை. அமெரிக்கா உத்தரவு!!Representative Image.

ஈரானிய பெட்ரோலியப் பொருட்களைக் கையாள்வதாகக் கூறப்படும் இந்திய நிறுவனத்திற்கு எதிரான முதல் நடவடிக்கையாக, மும்பையைச் சேர்ந்த திபாலாஜி பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 

திபாலாஜி பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளை சீனாவிற்கு அனுப்புவதற்கு ஈரானிடமிருந்து வாங்கியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட எட்டு நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்றாகும். மற்றவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் சீனாவில் அமைந்துள்ளன.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான தனது பயணத்தை முடித்த சிறிது நேரத்திலேயே பொருளாதாரத் தடைகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு ஒப்புக்கொண்டு, இந்திய நிறுவனங்கள் ஈரானில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதைத் தவிர்த்தன.

வளர்ந்து வரும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தக நிறுவனம் என்று தனது இணையதளத்தில் குறிப்பிடும் திபாலாஜி செய்ததாகக் கூறப்படும் ஒப்பந்தங்கள் ஈரானியப் எரிபொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யவில்லை என்றும், சீனாவுக்காக இந்தியாவிலிருந்து செயல்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்