Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

13 நாடுகள்.. சீனாவுக்கு கவுன்ட்டர் கொடுக்க.. இந்தியா செம நடவடிக்கை!!

Sekar May 23, 2022 & 16:13 [IST]
13 நாடுகள்.. சீனாவுக்கு கவுன்ட்டர் கொடுக்க.. இந்தியா செம நடவடிக்கை!!Representative Image.

ஆசியாவின் மிக முக்கிய பொருளாதாரங்களை உள்ளடக்கிய 12 நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது.

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள குவாட் கூட்டமைப்பின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் முன்னர் அமெரிக்கா உருவாக்கிய ட்ரான்ஸ் பசிபிக் திட்டத்திற்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பிடென், "சப்ளை செயின், டிஜிட்டல் வர்த்தகம், சுத்தமான எரிசக்தி மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்த நாடுகளுடன் அமெரிக்கா மிகவும் நெருக்கமாகப் பணியாற்ற ஒப்பந்தம் உதவும்" என தெரிவித்தார்.

இந்திய பிரதமர் மோடி, அனைவரையும் உள்ளடக்கிய நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக இந்தியா பாடுபடும் என்று தெரிவித்தார்.

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பில் அமெரிக்காவுடன் இணைந்து கையெழுத்திட்ட நாடுகள் இந்தியா, ஆஸ்திரேலியா, புருனே, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகும். அமெரிக்காவுடன் சேர்ந்து, இந்த நாடுகள் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% அளவிற்கு பிரதிநிதித்துவப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்