Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சட்டமன்றத்தில் புகைப்படம் எடுக்க தடை...அதிரடி உத்தரவு..!

madhankumar May 28, 2022 & 11:21 [IST]
சட்டமன்றத்தில் புகைப்படம் எடுக்க தடை...அதிரடி உத்தரவு..!Representative Image.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று உ.பி., சட்டசபையில் மாநில பட்ஜெட் தாக்கலானது. அப்போது எம்.எல்.ஏக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். இதனால் சட்டமன்றத்தில் புகைப்படம் எடுக்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சபாநாயகர் சதீஷ் மஹானா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
சட்டசபைக்குள் எம்.எல்.ஏக்கள் செல்ஃபி எடுத்தாலோ, புகைப்படம் எடுத்தாலோ அவர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் சட்டசபை கூட்டத்தொடர் சமயத்தின்போது, சட்டசபை வளாகத்தில் தனிப்பட்ட கேமராவை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. மீறுவோரின் மொபைல் போனை அவை காவலர்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்