Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டுரிச்சி.. போலீஸாரின் சில்லித்தனமான பதில்.. ஷாக்கான நீதிபதி.. 

Nandhinipriya Ganeshan Updated:
581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டுரிச்சி.. போலீஸாரின் சில்லித்தனமான பதில்.. ஷாக்கான நீதிபதி.. Representative Image.

உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா போலீஸ் ஸ்டேஷனில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், 2018-2019 ஆம் ஆண்டு மட்டும் மதுரா போலீஸ் நெடுஞ்சாலையில் நடத்திய கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடமிருந்து காவல்துறை பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும், கடத்தல்காரர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெறுங்கிவிட்டது. இதையடுத்து, குற்றத்தை நிரூபிக்க கடத்தல்காரர்களிடமிருந்து காவல்துறை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. 

ஆனால், போலீஸார் கஞ்சாவின் மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துனர். ஆனால், இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது, பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை தான் காட்ட வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. அப்போது, ஸ்கூலில் வீட்டு பாடம் எழுதாமல் சில்லி தனமான காரணம் கூறுவது போல, போலீஸ் கூறிய ஒரு பதில் தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அதாவது, போலீசார் கைப்பற்றி 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாகவும், உருவத்தில் சிறியதாக இருப்பதால், எங்களை கண்டு அவைகளுக்கு பயம் இல்லை என்று போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். இதை கேட்டு, ஷாக்கான நீதிபதி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், வேறொருவரிடம் கஞ்சாவை விற்றுவிட்டு, எலிகளின் மீது பழி போட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்