Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முத்தலாக் தடை விதித்தவர் அடுத்த தலைமை நீதிபதி.. பரிந்துரைத்த நீதிபதி என்.வி.ரமணா!!

Sekar August 04, 2022 & 19:23 [IST]
முத்தலாக் தடை விதித்தவர் அடுத்த தலைமை நீதிபதி.. பரிந்துரைத்த நீதிபதி என்.வி.ரமணா!!Representative Image.

நீதிபதி உதய் உமேஷ் லலித் இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக (CJI) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்று அவரது பெயரை மத்திய சட்ட அமைச்சருக்கு முறைப்படி பரிந்துரை செய்தார். 

நீதிபதி ரமணா ஆகஸ்ட் 26 அன்று ஓய்வு பெற உள்ளார். அதன் பிறகு நீதிபதி யு.யு.லலித் 49 வது தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். நவம்பர் 8 ஆம் தேதி 65 வயதில் ஓய்வு பெறுவதற்கு முன்பு அவர் தலைமை நீதிபதி நாற்காலியில் வெறும் 74 நாட்கள் மட்டுமே இருப்பார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எஸ்.ஏ.பாப்டேவிடம் இருந்து தலைமை பொறுப்பை ஏற்ற நீதிபதி ரமணா, 16 மாதங்களுக்கும் மேலாக பதவி வகித்தார்.

இந்நிலையில் 74 நாட்களுக்கு மட்டும் லலித் தலைமை நீதிபதியாக இருக்கும் நிலையில், அவருக்குப் பிறகு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை நீதிபதி பதவியை ஏற்பார் எனக் கூறப்படுகிறது. நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் தந்தையான நீதிபதி ஒய்.வி.சந்திரசூட்டும் இந்தியாவின் தலைமை நீதிபதியாக 1978 முதல் 1985 வரை ஏழு ஆண்டுகள் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி யு.யு.லலித்

நீதிபதி லலித், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு நியமனங்கள் மற்றும் நீதித்துறையின் பிற விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் நீதிபதிகளின் கொலிஜியத்திற்கு தலைமை தாங்குவார். ஆகஸ்ட் 13, 2014 அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, யு.யு.லலித் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்தார். அவரது தந்தை யு.ஆர்.லலித் ஒரு வழக்கறிஞராக இருந்து பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக ஆனார்.

நீதிபதி யு.யு.லலித் வழங்கிய பல முக்கிய தீர்ப்புகளில், முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று ஆகஸ்ட் 2017 இல் வரலாற்றுத் தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்சில் ஒரு அங்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் தீர்ப்பை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து அதற்கான சட்டத்தை மத்திய அரசாங்கம் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்ட நிலையில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப் நாரிமன் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் இந்த நடைமுறை அரசியலமைப்பை மீறுவதாகக் கருதியதால் 3-2 என்ற பெரும்பான்மையை முத்தலாக் அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கப்பட்டது.

மேலும் குழந்தையின் உடலின் அந்தரங்க பாகங்களைத் தொடுவது அல்லது உடலுறவு சம்பந்தப்பட்ட எந்தச் செயலையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு சமம் என்று தீர்ப்பளித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) நிர்வாகத் தலைவரானார். மேலும் நீதித்துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்