Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முன்னாள் எம்.எல்.ஏ. உடல் நலக்குறைவால் மரணம்; சோகத்தில் மூழ்கிய திமுக!

Kanimozhi Updated:
முன்னாள் எம்.எல்.ஏ. உடல் நலக்குறைவால் மரணம்; சோகத்தில் மூழ்கிய திமுக!Representative Image.

திருவாரூர் மாவட்டம்  வலங்கைமான் சட்டப்பேரவை தொகுதியின் தி.மு.க. முன்னாள் உறுப்பினர் சித்தமல்லி  ந.சோமசுந்தரம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

 

நீடாமங்கலம் வட்டம் சித்தமல்லி கிராமத்தில் நடேசன், சிவகங்கைஅம்மாள் மகனாக  1928 ல் பிறந்தவர் சோமசுந்தரம்(95). இவர் பாபநாசம், வலங்கைமான் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் 4 முறை போட்டியிட்டார். இதில் 1967 மற்றும் 1971 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வலங்கைமான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

திமுகவை அண்ணா தொடங்கிய காலத்திலிருந்து தனது வாழ்நாள் இறுதி வரை தி.மு.க.வில் பணியாற்றியவர். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சாவூர் அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மதியம் இறந்தார்.


இறந்த முன்னாள் சட்டப்பேவை உறுப்பினர் சித்தமல்லி ந.சோமசுந்தரம் மனைவி ஜெயம், சுசிலா ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் சோம.செந்தமிழ்ச்செல்வன், சித்தமல்லி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் சோம.நடேசமணி, உள்ளிட்ட இருமகன்களும் 7 மகள்களும் உள்ளனர்.


இறந்த சித்தமல்லி ந.சோமசுந்தரம் 1957 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 25 வருடங்கள் சித்தமல்லி ஊராட்சியின் தலைவராக இருந்தவர். நீடாமங்கலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர், நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர், கூட்டுறவு விவசாயவங்கி இயக்குனர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.


தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர் ,தலைமைச்செயற்குழு உறுப்பினர், திருவாரூர் மாவட்ட பொருளாளர், மாவட்ட அவைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்தவர். 1976 மிசாவில்  திருச்சி மத்திய சிறையில் ஒருவருட காலம் சிறையில் இருந்தவர். தி.மு‌.க. அறிவித்த அத்தனை போராட்டங்களிலும் கலந்துகொண்டு பலமுறை சிறைக்குச் சென்றவர்.


இறந்த சித்தமல்லி ந.சோமசுந்தரம் இறுதி ஊர்வலம் நீடாமங்கலம் குளம் வடகரை அவரது இல்லத்திலிருந்து இன்று8 ம் தேதி வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்