Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகைக்கு கொரோனா....அடுத்தடுத்து பாதிக்கப்படும் பிரபலங்கள்..!

madhankumar July 18, 2022 & 08:55 [IST]
பிரபல நடிகைக்கு கொரோனா....அடுத்தடுத்து பாதிக்கப்படும் பிரபலங்கள்..!Representative Image.

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டு தனது பணிகளை செய்துவந்த அவருக்கு மீண்டு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நான் எடுத்து வந்த எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி தற்போது எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. என பதிவிட்டுள்ளார். அத்துடன் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.  மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் கடந்த சில தினங்களில் தன்னை சந்தித்தவர்கள், கண்டிப்பாக  கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

வரலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் மிகவும் பிசியாக  நடித்து வருகிறார். தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இவர் சிம்புவுடன் போடா போடி என்ற படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்முறையாக தமிழில் அறிமுகமானார். வரலட்சுமி  விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, மாரி 2, சண்டக்கோழி 2, சர்தார்  படங்களில் நடித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்