Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடைசி திக்திக் நிமிடங்கள்.. நேபாள விமான விபத்தின் வைரலாகும் வீடியோக்கள்!!

Sekar Updated:
கடைசி திக்திக் நிமிடங்கள்.. நேபாள விமான விபத்தின் வைரலாகும் வீடியோக்கள்!!Representative Image.

நேபாளத்தில் விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட செல்போன், விமானத்தின் விபத்துக்குள்ளான இறுதி தருணங்களை படம்பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. 

காத்மாண்டுவில் இருந்து 72 பேரை ஏற்றிச் சென்ற இரட்டை எஞ்சின் ஏடிஆர் 72 விமானம், நேபாளத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான போகாராவில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில், விமானத்தின் உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளின் காட்சிகளுடனும், தரையிறங்குவதற்கு முன் விமானம் வட்டமிடும்போது கீழே உள்ள நகரத்தின் ஜன்னலிலிருந்து பார்க்கப்படும் காட்சிகளுடன் தொடங்கிய நிலையில், திடீரென்று ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது. இதையடுத்து கடைசி சில வினாடிகள் ஜன்னலுக்கு வெளியே பயங்கரமான நெருப்பைக் காட்டுகின்றன. மேலும் கலங்கிய பயணிகளின் அலறல் கேட்கிறது.

எனினும் இந்த வீடியோ நேபாள விமான விபத்தின்போது தான் எடுக்கப்பட்டதா என்ற உண்மைத்தன்மையை தற்போதுவரை சரிபார்க்க முடியவில்லை.

இதற்கிடையே, தரையில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோ, விமானம் தரையிறங்கத் தொடங்கியதும் திடீரென இடது பக்கம் சாய்ந்து, தலைகீழாக மாறி, தீப் பந்தாக வெடித்ததை படம்பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத்தில் ஐந்து இந்திய பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தின் காஜிபூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் ஒருவரான சோனு ஜெய்ஸ்வால், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சற்று முன்பு பேஸ்புக் லைவ் செய்து கொண்டிருந்தார். அவர் இறந்தவர்களில் ஒருவர். அதே வீடியோ அவரது பேஸ்புக் கணக்கில் உள்ளது. அது சரிபார்க்கப்படவில்லை.

வீடியோ காட்சிகளை அனுப்பிய நேபாளத்தின் முன்னாள் எம்.பி.யும், நேபாளி காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினருமான அபிஷேக் பிரதாப் ஷா அளித்த பேட்டியில், அந்த வீடியோ காட்சிகள் தனக்கு நண்பரிடமிருந்து கிடைத்ததாகவும், இடிபாடுகளில் இருந்து இன்று மீட்கப்பட்டதாகவும் கூறினார்.

இதற்கிடையே, நேபாள அரசு விமான விபத்திற்கான காரணம் என்ன என்பதை ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்