Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vietnam Trending News : சீனாவின் கின்னஸ் சாதனையை முறியடித்த வியட்நாம்..?

Muthu Kumar May 30, 2022 & 18:00 [IST]
Vietnam Trending News : சீனாவின் கின்னஸ் சாதனையை முறியடித்த வியட்நாம்..?Representative Image.

Vietnam Trending News : வியட்நாமில் உள்ள பாச் லாங் (கண்ணாடி பாலம்) உலகின் மிக நீளமான பாலம் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

வியட்நாம் நாட்டில் உள்ள சான்லா பகுதியில் உள்ள வனப்பகுதிகளின் அழகை பார்த்துக் கொண்டே நடமாடும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்க வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணி முடிவடைந்துள்ளது. மேலும் பாச் லாங் என்னும் இந்த கண்ணாடி பாலம் கடந்த மாதம் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த உலகின் பாச் லாங் என்னும் பாலம் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளது. மேலும், இப்பாலம் 2073 அடி நீளமும் தரை மட்டத்திலிருந்து 492 அடி உயரத்திலும் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்க்கு முன்னதாக சீனாவின் குவாங்டாங் கண்ணாடி பாலம் 1,726 அடி நீளத்தில் அமைந்துள்ளதால் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலமாக இருந்தது. இந்நிலையில் இந்த சாதனையை பாச் லாங் பாலம் முறியடித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்