Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரஷ்யாவுக்கு புதிய வித தடை விதித்த லித்துவேனியா

Bala June 21, 2022 & 17:23 [IST]
ரஷ்யாவுக்கு புதிய வித தடை விதித்த லித்துவேனியாRepresentative Image.


போலாந்து, லித்துவேனியா நாடுகளுக்கு இடையே ரஷ்யாவின் கலினின்கிராட் மாகாணம் அமைந்துள்ளது. ரஷ்யா நிலப்பரப்பில் இருந்து தனித்துவிடப்பட்டுள்ள இந்த மாகாணத்திற்கு லித்துவேனியாவின் வழியாக சரக்கு ரயிலில் மட்டுமே உணவு தானியங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படும். இந்நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய சரக்கு ரயில்களுக்கு லித்துவேனியா தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யாவுடன் கலினின்கிராட்டின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

லித்துவேனியா நாட்டின் இந்த செயலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் லித்துவேனியாவின் இந்த செயலுக்கு ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்