Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வைகை அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு..!

madhankumar June 01, 2022 & 18:56 [IST]
வைகை அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு..!Representative Image.

வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மே 23-ந்தேதி 66.93 அடியாக இருந்த நிலையில், கடந்த 9 நாட்களாக சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 62 அடியை எட்டியது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி, சேடபட்டி குடிநீருக்காக 72 கனஅடி வீதம் வழக்கம்போல் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்றின் வழியாக நீர்திறப்பு நிறுத்தப்பட்டு மதுரை, திண்டுக்கல் மாவட்ட இருபோக பாசனத்திற்காக இன்று முதல் அணையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதே போல் முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 132 அடியைகடந்திருப்பதாலும் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாலும் அணையில் இருந்து நீரை திறந்துவிட மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி முல்லைபெரியாறு அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக விநாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீருக்காக 100 கனஅடியும் சேர்த்து 300 கனஅடி திறக்க உத்தரவிட்டது. 120 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அரசு முடிவெடுத்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்