Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மக்களே உஷார்.. இனி ரூ.2,000 அபராதம்..!

Sekar [IST]
மக்களே உஷார்.. இனி ரூ.2,000 அபராதம்..!Representative Image.

இந்தியாவில் ஐஎஸ்ஐ தர சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் அணிந்தாலோ அல்லது ஹெல்மெட்டை சரியாக அணியாமலோ பைக் ஓட்டினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

ஹெல்மெட் சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும் பொருட்டு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிப்பதோடு, வாகன ஓட்டி ஹெல்மெட்டை அணிந்து, அதற்கான லாக் முடிச்சை அணியவில்லை என்றால் அவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

BSI (Bureau of Indian Standards) தரச்சான்று இல்லாத ஹெல்மெட் அணிந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் ட்ராபிக் சிக்னலில் விதிமுறைகளை பின்பற்றாமல் நிற்காமல் செல்லும் நபர்களுக்கும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்

பைக் ஓட்டும் பலர் அபராதத்தில் இருந்து தப்பிக்க, லாக் முடிச்சை அணியாமல் வெறுமனே ஹெல்மெட்டை மட்டுமே அணிவதை ட்ராபிக் காவலர்கள் கவனித்து அறிக்கை அளித்ததன் அடிப்படையிலேயே இந்த புது கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளதாக தெரிகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்