Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கஞ்சாவிற்கு தடையில்லை...அரசின் உத்தரவால் அதிகரித்த விற்பனை..!

madhankumar August 03, 2022 & 09:01 [IST]
கஞ்சாவிற்கு தடையில்லை...அரசின் உத்தரவால் அதிகரித்த விற்பனை..!Representative Image.

தாய்லாந்தில் கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாகிய நிலையில் அந்த நாட்டின் சுற்றுலா துறை மிக பெரிய ஏற்றத்தை கண்டுள்ளது. இதன் மூலம் நாள்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாவிற்காக மக்கள் குவித்துவருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை  சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை சட்டபூர்வமாகிய தாய்லாந்து இந்த ஆண்டுமுதல் அதனை பயிரிடுவது மற்றும் பிரித்தெடுத்தலுக்கு இருந்த தடையை நீக்கியுள்ளது.

மேலும் பொழுது போக்கிற்காக கஞ்சாவை பயன்படுத்தி கொல்லம் என அறிவித்துள்ள நிலையில் கஞ்சா பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சட்டத்தின் மூலம் தாய்லாந்தில் சுற்றுலா துறை பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கப்பட்டதிலிருந்து, தாய்லாந்தில் உள்ள தொழில்முனைவோர், கஞ்சாவுக்கு உலக அளவில் இருக்கும் பிரம்மாண்டமான தேவைகளை பணமாக்க முயற்சிக்கின்றனர், அதன் எதிரொலியாக தாய்லாந்தில் இப்போது, ​​கஞ்சா பயன்படுத்த தின்பண்டங்கள், சோப்புகள், தேநீர் மற்றும் பற்பசை என வெவ்வேறு விதமான பொருட்கள் கிடைக்கின்றன. இதுபோன்ற பொருட்களை இந்தியாவில் நாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம்.

தாய்லாந்தில் இதன் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவது அனைவராலும் வரவேற்கப்படுகிறது, ஆனால் தங்கள் நாட்டின் கஞ்சா தளர்வுக் கொள்கையானது மருத்துவ நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது இல்லை என்றும் தாய்லாந்தின் சுற்றுலா ஆணையம், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது கஞ்சா விற்பனை செய்யும் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் பணியில் அந்த நாட்டில் விவாதங்கள் எழுந்துள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்