Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மேற்குவங்க பஞ்சாயத்துத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - மத்தியப்படை பாதுகாப்புடன் தொடங்கியது..!

Saraswathi Updated:
மேற்குவங்க பஞ்சாயத்துத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - மத்தியப்படை பாதுகாப்புடன் தொடங்கியது..!Representative Image.

மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மத்திய படை பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 8ம் தேதி பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், எதிர்க்கட்சிகளாக பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதேபோல், வாக்குப்பதிவு நாளான்றும் பல இடங்களில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கலவரத்தில் வாக்குப்பெட்டிகள் எரிக்கப்பட்டன. துப்பாக்கிச்சூடு சம்பவமும் அரங்கேறியது. இந்த வன்முறை மற்றும் கலவரங்களில் 20 பேர் உயிரிழந்தனர். தேர்தல் வன்முறை தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே வாக்குவாதங்களும், குற்றச்சாட்டுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. 

மேலும், புரூலியா, ஜல்பைகுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச்சாவடிகளில் மத்திய படைகளின் பலத்த பாதுகாப்புடன் நேற்று மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.  இந்நிலையில், மேற்குவங்க பஞ்சாயத்துத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மத்திய படை பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குகள் முதலில் எண்ணப்பட்டுவருகின்றன. அதனைத் தொடர்ந்து, ஜில்லா சமிதி மற்றும் ஜில்லா பரிஷத்துக்கான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான அளவு மத்தியப் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதோடு, சிசிடிவி கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்குவங்கத்தில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இந்தக் குழு இன்று கொல்கத்தா வந்து விசாரணையைத் தொடங்கவுள்ளது. அந்த குழு வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி, அதற்கான அறிக்கையை பாஜக தேசியத் தலைவரிடம் விரைவில் வழங்கும் எனத் தெரிகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்