Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

OPS தான் வேண்டும்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeWantOPS.. மாஸ் காட்டும் அரசு ஊழியர்கள்!!

Sekar September 17, 2022 & 16:13 [IST]
OPS தான் வேண்டும்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeWantOPS.. மாஸ் காட்டும் அரசு ஊழியர்கள்!!Representative Image.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) அமல்படுத்தக் கோரி குஜராத் மாநில அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இன்று மாநிலம் முழுவதும் 'மாஸ் கேசுவல் லீவ்' போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ட்விட்டரில் இதை வலியுறுத்தி #WeWantOPS என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறி அரசு ஊழியர் சங்கங்கள் நேற்று மறியலை வாபஸ் பெற்றன. ஆனால் அவர்களின் முக்கிய கோரிக்கையான ஓபிஎஸ் எனும் பழைய பென்சன் திட்டத்தை அரசு பரிசீலிக்கவில்லை என்று மாவட்ட அளவிலான தொழிற்சங்கங்கள் கூறி எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து மாஸ் கேசுவல் லீவ் போராட்டத்தில் இன்று பல அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் மட்டும் 7,000 அரசு ஆசிரியர்கள் இன்று விடுமுறையில் இருந்தனர்.

பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி ஆசிரியர்கள், ஊராட்சி சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

காந்திநகரில், அதிருப்தி அடைந்த ஏராளமான ஊழியர்கள், பழைய சசிவாலயா வளாகத்தில் பேரணியாக சென்று, பணியில் இருந்து விலகி இருந்தனர்.

"எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக எங்கள் தொழிற்சங்க தலைவர்கள் மறியலை கைவிடுவதாக அறிவித்தனர். ஆனால், பழைய பென்சன் திட்டத்திற்கான எங்கள் முக்கிய கோரிக்கை இன்னும் உள்ளது. எங்களில் பெரும்பாலானோர் 2005க்கு பிறகு பணியில் சேர்ந்துள்ள நிலையில், 2005 க்கு முன் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே பழைய பென்சன் திட்டம் வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது." என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஊழியர் கூறினார்.

முன்னதாக பாஜக அரசின் 5 அமைச்சர்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு, சம்யுக்த் கர்மாச்சாரி மோர்ச்சா தலைவர் திக்விஜய்சிங் ஜடேஜா மற்றும் ராஷ்ட்ரிய சம்யுக்த் மோர்ச்சா தலைவர் பிகாபாய் படேல் ஆகியோர், ஓபிஎஸ்-ஐ மீண்டும் அறிமுகப்படுத்துவதைத் தவிர, பெரும்பாலான கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதால், விடுமுறைப் போராட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிவித்தனர். .

ஏப்ரல் 2005-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் கிடைக்கும் என்று மாநில அரசு நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்