Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

360 டிகிரி சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை...படம் போட்டுக்காட்டிய நிதியமைச்சர்..!

madhankumar May 27, 2022 & 19:50 [IST]
360 டிகிரி சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை...படம் போட்டுக்காட்டிய நிதியமைச்சர்..!Representative Image.

தமிழகத்தில் நலத்திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி நேற்று சென்னை வந்திருந்தார். அப்போது விழாமேடையில் நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு, ஆகியவையே தற்போது செய்யவேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் நாட்டின் பிரதமரை மேடையில் அமரவைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் பேசிவிட்டார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் கூறிய அவர் முதல்வரும் நானும் கொள்கையில் 360 டிகிரி மாறுபட்டவர்கள் . 360 டிகிரி நாங்கள் திமுக எதிரிதான். ஆனால் அதற்காக முதல்வருக்கு உண்டான மரியாதையை கொடுக்காமல் இருக்க மாட்டோம் என்று தெரிவித்து இருந்தார். தற்போது அது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதற்கு பத்தி கூறும் விதமாக 60 டிகிரி முதல் 360 டிகிரி வரை படம்போட்டு பாடம் எடுத்துள்ளார்.

அதாவது முதல்வரும் நானும் வெவேறு கருத்துடையவர்கள் 360 டிகிரியில் மாறுபட்டிருக்கிறோம் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில். 180 டிகிரி தான் நேர் எதிர்மறை ஆகும். 360 என்றால் இருவரும் இணைந்து ஒத்துப்போகும் நிலை. அதாவது முதல்வரும் நானும் ஒரே கருத்துக்களை கொண்டவர்கள் போல் என்றாகி விடும் என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்