Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ப்ளூ ஆதார்...வாங்குவது எப்படி?

madhankumar May 23, 2022 & 13:30 [IST]
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ப்ளூ ஆதார்...வாங்குவது எப்படி?Representative Image.

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டையாக புளூ (Blue Aadhaar) அல்லது பால் ஆதார் (Baal Aadhaar card) அட்டையை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. 

UIDAI எனப்படும் Unique Identification Authority of India என்ற அமைப்பானது இந்திய குடிமக்கள் அனைவர்க்கும் வழங்குவதுதான் இந்த ஆதார். அரசின் முக்கிய திட்டங்களை பெற இந்த ஆதார் அடையானது மிகவும் அவசியமாகும். இச்சூழலில், தற்போது ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டையாக புளூ அல்லது பால் ஆதார் அட்டையை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள் ஐந்து வயதைக் கடந்ததும் இந்த புளூ அடையாள அட்டைகள் செல்லுபடி ஆகாதவை ஆகிவிடும்.

இந்த ஆதார் அட்டையை பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

  • இந்த புளூ ஆதார்(Blue Aadhaar) அட்டையைப் பெற முதலில் ஆதாரின் அதிகாரப் பூர்வ தளமான https://uidai.gov.in/ க்கு செல்ல வேண்டும்.
  • அதில் ஆதார் அட்டை பதிவு செய்வதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • குழந்தைகளின் பெயர், பெற்றோர்/ பாதுகாவலரின் கைப்பேசி எண், அவர்களது பிற பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்யவேண்டும்.
  • மக்கள் தொகை விவரங்களான முகவரி, ஊர், மாநிலம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்க.
  • பதிவிட்ட தகவல்களை Submit செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து Appointment எனும் விருப்பத்தை தேர்வு செய்து, உங்களுக்கு அருகிலுள்ள தகவல் பதிவு செய்யும் மையத்தைத் தெரிவு செய்து, நேரில் செல்லும் நேரத்தையும் உறுதி செய்து கொள்ளுங்கள். 
  • முகவரி சான்று, ஐடி சான்று உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் உடன் எடுத்துச் செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: முதல்வர் வீட்டிற்கு வெடுக்குண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி...அலேக்காக தூக்கிய போலீஸ்..!

5 வயது குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் முறை ஏதும் பின்பற்றப்படாது. குழந்தைகளின் UIDAI ஆனது மக்கள்தொகை தரவு, பெற்றோரின் UIDAI உடன் இணைக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே செயலாக்கப்படும்.

இதனையடுத்து குழந்தைகள் 15 வயதை அடைந்த பிறகு, விரல், கண் கருவிழி ஆகிய பயோமெட்ரிக் முறையை அப்லாட் செய்ய வேண்டும். 

மேலும் செய்திகளை காண: search around web செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும். உடனுக்குடனான அப்டேட்டுகளுக்கு இணைந்திருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்