Thu ,Nov 07, 2024

சென்செக்ஸ் 80,378.13
901.50sensex(1.13%)
நிஃப்டி24,484.05
270.75sensex(1.12%)
USD
81.57
Exclusive

வாழத்தகுந்த நாடுகளில் முதலிடத்தை பிடித்த நாடு எது தெரியுமா?

madhankumar June 23, 2022 & 16:14 [IST]
வாழத்தகுந்த நாடுகளில் முதலிடத்தை பிடித்த நாடு எது தெரியுமா?Representative Image.

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஆக்லாந்தை பின்னுக்குத் தள்ளி வியன்னா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. ஆக்லாந்து 34-வது இடத்திற்கு சரிந்துள்ளது. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிச் ஆகியவை இரண்டாவது இடத்தில்  உள்ளன. கனடாவின் கல்காரி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஆறாவது இடத்தையும், ஜெர்மனியின் பிராங்பர்ட் ஏழாவது இடத்தையும், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் ஒன்பதாவது இடத்தையும் பிடித்தன. போர் காரணமாக உக்ரைன் தலைநகர் கீவ் இதில் தேர்வு செய்யப்படவில்லை. ரஷ்ய நகரங்களான மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்கள் மேற்குலகின் தடைகளின் தாக்கம் காரணமாக தரவரிசையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக எகனாமிஸ்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்