Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லிட்டில் பிரின்சஸ் அட்ராசிட்டி...மூன்று வேளையும் நூடுல்ஸ்...விவாகரத்து வாங்கிய கணவர்.!

madhankumar May 30, 2022 & 16:04 [IST]
லிட்டில் பிரின்சஸ் அட்ராசிட்டி...மூன்று வேளையும் நூடுல்ஸ்...விவாகரத்து வாங்கிய கணவர்.!Representative Image.

ஒரு நாளில் மூன்று வேளையும் விதவிதமாக சாப்பிடும் நமக்கு ஒரு வேளை பிடிக்காத உணவு கொடுக்கப்பட்டால் சாப்பிட தயங்குவோம். அப்படி இருக்கையில் மூன்று வேளையும் மேகி நூடுல்ஸ் சமைத்து கொடுத்தால் என்னவாகும். அப்படி சமைத்துக் கொடுத்ததால் விவாகரத்து பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.எல். ரகுநாத் முன்னிலையில் வந்த இந்த வழக்கு குறித்து அவர் கூறுகையில் நமக்கு சிரிப்பையும், அதே நேரத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ற அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

இந்த வழக்கு குறித்து அவர் கூறுகையில், இந்த வழக்கு விசாரணையின் போது அப்பெண்ணின் கணவர், என் மனைவிக்கு நூடுல்ஸை தவிர வேறு ஏதும் சமைக்க தெரியவில்லை, வாரத்தில் ஒரு தடவை இரண்டு தடவை என்றல் பரவாயில்லை தினமும் மூன்று வேளையும் எனக்கு நூடுல்ஸ் மட்டுமே சமைத்து தருகிறார். என கூறினார். மேலும் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றால் வெறும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை மட்டுமே அள்ளிப்போட்டு கொண்டுவருவாள் என கூறினார். 

மேலும் இந்த வழக்கு சற்று வித்தியாசமாக இருப்பதால் இதற்கு மேகி வழக்கு என்றே நாங்கள் பெயர் வைத்துள்ளோம் என கூறினார். வழக்கின் முடிவில் இருவரும் ஒரு மனதோடு விவாகரத்து பெற்றுக்கொண்டனர் என கலங்கியபடி கூறினார் நீதிபதி. 

மேலும் பேசிய அவர் பொதுவாக திருமண வாழ்க்கையில் ஏற்படும் தகராறுகளை சரிசெய்வது சற்று கடினமான விஷயம்தான். 800 - 900 விவாகரத்து வழக்குகளில் வெறும் 20 - 30 வழக்குகளில் மட்டுமே ஒன்று சேர்வார்கள். லோக் அதாளத் போன்றவற்றில் 110 விவாகரத்து வழக்குகளில் 32 வழக்குகளில் ஒன்று சேர்வார்கள் என்கிறார். மேலும் கடந்த சில ஆண்டுகளில் விவாகரத்து வழக்கு என்பது அதிகரித்து காணப்படுகிறது என வேதனையாக தெரிவித்தார். 

நல்ல வேலையாக திருமணம் முடிந்து விவாகரத்து பெற வேண்டுமென்றால் குறைந்தது ஒரு வருடம் காத்திருக்க வேண்டும், அப்படி இந்த சட்டம் இல்லையென்றால் திருமண மண்டபத்தில் இருந்து நேரடியாக நீதிமன்றத்திற்கு விவாகரத்து கேட்டு வருவார்கள். அப்படி இருந்தாலும் கூட திருமணம் முடிந்த மறு நாளே விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடிய தம்பதிகளும் உண்டு என கூறுகிறார்.

தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அமர்ந்து பேசி சுமூகமாக முடிவெடுக்காமல் அதில் உப்பும், மிளகாய் தூளும் சேர்த்து இன்னும் காரசாரமாக பிரச்சனையை பெரிதாக்கிக்கொண்டு விவகாரத்தில் வந்து நிற்பார்கள்.  திருமணத்தின்போது அணிந்திருந்த ஆடையின் நிறம் சரியில்லை, திருமணம் ஆன நாளில் இருந்து வெளியே எங்கேயும் கூட்டி செலவில்லை என கூறி கூட விவாகரத்து கோர வந்தவர்கள் அதிகம் என கூறுகிறார் நீதிபதி.

இதில் குடும்பத்தார் பார்த்து நடத்தி வாய்த்த திருமணம் அல்லது காதல் திருமணம் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் விவாகரத்து கேட்டு வருவார்கள். பொதுவாக கிராம பகுதிகளைவிட நகர பகுதிகளில் வசிப்பவர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். ஏனெனில் கிராம பகுதியில்இருக்கும் பெண்கள்  சகித்துக்கொண்டு வாழ பழகி கொள்கிறார்கள் ஆனால் நகரப்பகுதியில் வசிக்கும் பெண்கள் நன்கு படித்து நல்ல சம்பளம் வாங்கும் பெண்ணாக இருப்பதினாலோ என்னவோ இவ்வாறு நடக்கிறது என கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்