Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர் முனாவை தாக்குவோம்...பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை..!

madhankumar August 12, 2022 & 12:30 [IST]
நடிகர் முனாவை தாக்குவோம்...பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை..!Representative Image.

நடிகர் முனாவர் ஃபாரூக்கி ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருப்பதாக எழுந்த தகவலை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ டி.ராஜா சிங் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

ஸ்டேண்டப் காமெடியனான நடிகர் முனாவர் ஃபாரூக்கி கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியின் போது இந்துக்கடவுள்களையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் இழிவு படுத்துவகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியி வந்தார். இதனையடுத்து அவர் நிகழ்ச்சி நடத்தும்போது எல்லாம் அவருக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் முனாவர் ஃபாரூக்கி ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கனா மாநில பாஜக எம்.எல்.ஏ டி.ராஜா சிங் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் முனாவர் ஃபாரூக்கி நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதனை தடுப்போம், அவரை அடிப்போம், மேலும் அரங்கத்தை தீயிட்டு எரிப்போம் என கூறியுள்ளார். மேலும் அவர் தெலங்கானாவிற்கு வந்தால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிப்போம் என கூறியுள்ளார்.

இப்படி மிரட்டல் விடுத்த பாஜக எம்.எல்.ஏ டி.ராஜா சிங் அடிக்கடி ஏதேனும் கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ராம நவமி அன்று அதில் பங்கேற்ற அவர் விரைவில் பாரதம் இந்து ராஷ்டிரமாக மாறும், ராமர் பெயரை உச்சரிக்காதவர்கள் நாட்டை விட்டு ஓடிஏ வேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து பொது வெளியில் அமைதியை சீர்குலைப்பதை போல் பேசியதை அடிப்படையாக வைத்து ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் உத்திரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்