Wed ,Oct 23, 2024

சென்செக்ஸ் 80,081.98
-138.74sensex(-0.17%)
நிஃப்டி24,435.50
-36.60sensex(-0.15%)
USD
81.57
Exclusive

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள்...தெரிஞ்சு வச்சுகோங்க...!

madhankumar June 15, 2022 & 16:28 [IST]
பெண்களுக்கான அடிப்படை உரிமைகள்...தெரிஞ்சு வச்சுகோங்க...!Representative Image.

நாம் தற்போது வாழ்ந்துவரும் இந்த உலகில் பாலின பாகுபாடு என்பது இருந்துகொண்டுதான் இருக்கிறது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை தொடர்ந்தவண்ணம் தான் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், வேலை செய்யும் இடங்கள், ஏன் எங்குமே செல்லாமல் வீட்டில் இருக்கும் பச்சிளம் குழந்தைகள் கூட பாலியல் துப்புறுதலுக்கு ஆளாகின்றனர்.

இதில் ஏதேனும் ஒன்று அல்லது இதனை தவிர்த்து பெண் என்பவளுக்கு இதனை எதிர்த்து நிற்கவும் கேள்வி கேட்கவும் பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏனோ அது பலருக்கு தெரியாமல் போய்விடுகிறது. அவற்றில் இருந்து சில உரிமைகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள்:

1. தற்போது ஏதேனும் குற்ற சம்பவம் நடந்திருக்கும் போது அதில் குற்றம் சாட்டப்பட்டவராக ஒரு பெண் இருக்கும் பட்சத்தில், அவர்கள் கண்ணியத்திற்கு எந்தவித இழிவும் ஏற்படாதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு ஏதேனும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டால், பெண் அலுவலரோ அல்லது பெண் மருத்துவரோதான் அதனை செய்ய வேண்டும்.

2. பணிபுரியும் இடங்களில் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஏற்பட்டால் புகார் அளிக்கலாம். துன்புறுத்தலுக்கு உள்ளானவர் எழுத்து வடிவில் புகார் அளிக்க மூன்று மாத கால அவகாசமும் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

3. சம ஊதிய சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள விதிகளில் பாலின விகிதத்தில் சம்பளத்தி பாகுபாடு கட்ட முடியாது. ஆண் பெண் என இருவருக்கு சமமான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

4. குடும்ப வன்முறைக்கு எதிராக கணவர், அவரின் குடும்பத்தினரிடம் இருந்து மனைவி, அவரது தாய், சகோதரிக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஜாமீனில் வெளிவர முடியாத சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

5. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் ரகசியம் காக்கப்படவேண்டும். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண் ஒரு பெண் காவலர் முன்னிலையில் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த வேண்டும்.

6. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவி அல்லது சட்ட சேவைகள் ஆணையத்திடம் இருந்து உதவி பெறலாம்.

7. குற்ற வழக்குகளில் பெண்களை மாலை 6 மணி முத்தை காலை 6 மணி வரை கைது செய்யக்கூடாது. ஆனால் சில வழக்குகளில் மட்டும்  முதல் பெஞ்ச் மாஜிஸ்திரேட்டின் உத்தரவின் பேரில் கைது செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்படும் பெண் ஒரு பெண் காவலர், குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் மூணுலயில் அவர்களது வீட்டில் வைத்து விசாரிக்கப்பட வேண்டும்.

8. ஒரு பெண்ணின் உருவத்தை வைத்து கேலி செய்வது, அவர்களின் உடல் உறுப்பு, நிறம் ஆகியவற்றை குறித்து பேசி அவர்களின் மனதை காயப்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

9. ஒரு பெண்ணிற்கு விருப்பம் இல்லை என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவரின் பின்னல் செல்வது, அவர்களை தொந்தரவு செய்வது, போன் செய்வது, சமூக வலைத்தளம் மூலம் தொடர்புகொள்ள முயற்சிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

10. சம்பவம் நடந்த இடம் அல்லது குறிப்பிட்ட எல்லை அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்க ஜீரோ எப்.ஐ.ஆர்., வசதி உள்ளது. பின்னர் அந்த வழக்கை எந்த காவல் நிலையத்துக்கு உட்பட்டதோ அங்கு மாற்றிக் கொள்ளலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்