Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலக கோப்பை லோகோவை காரில் பயன்படுத்த தடை..!

madhankumar June 27, 2022 & 14:39 [IST]
உலக கோப்பை லோகோவை காரில் பயன்படுத்த தடை..!Representative Image.

22வது சர்வதேச உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற நவம்பர் மாதம் 21ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கத்தார் உட்பட 32 நாடுகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 64 போட்டிகள் கொண்ட இந்த உலகக்கோப்பை கோப்பை போட்டி சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. ரசிகர்கள் போட்டிகளை காண பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த பிபா உலகக்கோப்பை லோகோவை பொதுமக்கள் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் தங்களது வாகனங்களின் நம்பர் பிளேடுகளில் பயன்படுத்தி வருகின்றனர் என குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கத்தார் அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், உரிய அனுமதியின்றி உலகக் கோப்பை லோகோவை பொது மக்கள் தங்கள் கார் நம்பர் பிளேட்டில் வைத்திருக்கக் கூடாது. மேலும் இந்த பிரத்யேகமான லோகோ சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் (பிபா) அங்கீகரிக்கப்பட்ட பிராண்டட் நம்பர் பிளேட்டுகளில் சிறப்பு பதிப்புகள் ஏலம் விடப்பட்டு பதிவு செய்யப்பட்டவை’’ என்று தெரிவித்துள்ளது.

விசேஷமாக பதிவு செய்யப்படாத வாகனங்களில் பொதுமக்கள் உலகக்கோப்பை லோகோவை நகல் எடுத்து பயன்படுத்துவது பெரிய குற்றமாகும். இதை மீறுவோர் மீது  உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அந்நாட்டு அமைச்சகம் பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்